தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்

தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து கி.மு. 50,000 வரை நிலைத்திருந்தது. குறிப்பாக சென்னை அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 15 லட்ச ஆண்டுகளுக்கு மேலும் பழமை வாய்ந்த தழும்பழி கல்லாயுதங்களைக் கொண்டு இதை நிறுவலாம். தழும்பழி ஆயுதங்கள் காலம் தழும்புரி என்ற செப்பனிடப்படாத ஆயுதங்களுக்கு பிந்தியவை ஆகும். அதனால் தமிழகத்தில் கிடைக்கும் தழும்பழிஆயுதங்களுக்கே 15 லட்சம் ஆண்டுகள் பழமை இருப்பின் அதற்கு சில லட்சம் ஆன்டுகளுக்கு முன்னரே தழும்புரிஆயுதங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் தமிழகத்தின் கற்கால ஆரம்பத்தை 20 லட்சம் ஆன்டுகளுக்கு முன்னரும் கொண்டு செல்ல இயலும். ஆனால் இதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது.

சென்னை தொழிற்சாலை

தொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் களமான அத்திரம்பாக்கத்தையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஆங்கிலத்தில் மெட்ராசு இன்டசுட்ரி என்று கூறுவதுணடு. இப்பெயர் 1863ல் புருசு ஃபுட்டே என்னும் ஆய்வாளர் மேலுள்ள படிமத்தில் உள்ள ஆயுதங்களை கண்டறிந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒசுவால்ட் எமன்கின் என்பவரால் சென்னைக்கு வழங்கப்பட்டது. அதன்படி தென்னிந்தியாவில் அதிப்பழமை வாய்ந்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

ஆதாரங்கள்

சென்னையில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எழும்பின் கால்துண்டுகள் கிடைத்தது தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது.

கற்களின் இயல்புகளும் வகைகளும்

வடமதுரை

செங்கல்பட்டு அருகிலுள்ள வடமதுரையில் கிடைத்த பல வகையான கீழைப்பழங்கற்கால ஆயுதங்களைக் கொண்டு அங்கு படிப்படியாக ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியை கண்டறிய இயலும். அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் கிடைத்த அடர்பழுப்பு கீழைப் பழங்கற்கால ஆயுதங்கள்

பழுப்புப் பிரிவு

இதில் முதல் வகை தழும்புரி என்னும் அதிகம் செப்பனிடப்படாத ஆயுதங்கள் அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டாம் பிரிவு பழைய தழும்பழி ஆயுதங்களாகும். இது சற்று குன்றிய பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.

செம்பூரன் பிரிவு

இதில் முதல் வகை ஆயுதங்கள் சிறிது செம்பூரன் கலப்புடன் காணப்படும் மத்திய தழும்பழி கால ஆயுதங்களாகும். இரண்டாவது வகை அதிகச் செம்பூரன் கலப்புடன் காணப்படும் பிற்கால தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.

பளிங்குப் பிரிவு

இந்த வகை ஆயுதங்களும் குவாட்சயிட் கற்களால் செய்யப்பட்டாலும் இவற்றோடு கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்குக் கற்களால் ஆனவை. இவை வளர்ச்சியடைந்த தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *